Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

மார்லின் மன்றோ

(0)
Price: 166.00

In Stock

Book Type
வாழ்க்கை வரலாறு
Number Of Pages
192
லியானார்டோ டாவின்ஸியின் உலகப் புகழ்பெற்ற மோனா லிஸா ஓவியத்தை அறியாதவர்கள் இருக்கவே . ஓவியர்கள் எல்லோரிடமும் டாவின்சியின் தாக்கம் இருக்கிறது.

மோனா லிசா பிரபுத்துவ காலத்துப் பெண்களின் வாழ்க்கை விழுமியங்களின் மொத்த உருவமாக, லிசா கெரார்டினி எனும் இத்தாலி நாட்டுப் பெண்ணை மாதிரியாக வைத்து வரையப்பட்ட ஓவியம் அதை மாதிரியாக வைத்துக் கொண்டு 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் 2000 த்தைத் தாண்டிய விளம்பரப்படங்கள் தாயாரிக்கப்பட்டாகி விட்டன. ஆனால் யாரும் அவள் அடையாளத்தின் குறியீட்டை, அதற்கான காலம் கடந்தும் மாற்ற முற்படவில்லை.

அந்த மரபை முதல் முதலில் உடைக்கத் துணிந்தவர் ஆண்டி வார்ஹால் எனும் அமெரிக்க ஓவியர், பாப் இசைக்க கலாச்சாரத்தின் போப்பாக அவர் தேர்ந்தெடுத்த மாதிரி 'நோர்மா ஜீன்' எனும் பெண். அவர் தீட்டிய க்யூவியத்தின் பெயர் 'நடிகை மார்லின் மன்றோ'. அவளது அகால மரணத்திற்குப் பின் புதைந்துள்ள மர்மங்களைப் பதிவு செய்யும் விதம் அவள் நடித்து வெளிவந்த நயகரா படத்தில் வரும் புகைப்படத்தை பட்டுத்திரை ஓவியமாக்கினார்.

வாழும் காலத்தில் மார்லின், மோனாவைப் போல் குடும்பம் என்ற சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் சிறகடித்துப் பறந்த உல்லாசப் பறவை. வெடித்துச்சிரிப்பவள். தன்நடை, உடை பாவனையில் காட்டிய கட்டடற்ற கவர்ச்சியையும், அதன்பால் ஏற்படும் கவன ஈர்ப்பையும் அணு அணுவாய் அனுபவித்தவள், உலகின் அரியவை அனைத்தையும் ஆனந்தக் கூத்தடிரசித்தவள். ஆண்வழி சமூகத்தின் முறைகளைத் தன் கால்களின் இடுக்கில் போட்டுப் புதைத்தவள். அதனால்தான் அவளைஒரு கலாச்சார சின்னமாக நிறுவுவதில் வார்ஹலால் ஓவியத்தில் அவருக்கிருந்த பாண்டியத்தைச் சரியாக பிரயோகித்து வெற்றியடைய முடிந்தது.

மர்லின் மன்றோவின் தொழில் முறை வாழ்க்கை வண்ணமயமானதாக இருந்தது. தனிப்பட்ட வாழ்க்கையின் மேல் இருள் மேவியிருந்தது. அந்த உயிர் வாங்கிடும் ஓவியத்தின் பின் இருந்த பெண், எப்படி 21ஆம் நூற்றாண்டில் பெண்ணியப் போக்குகளை வரையறுக்கும் ஆளுமையாக மாறினாள் என்பதைச் சுவைப்பட சொல்லும் ரத்தினச் சுருக்கமான தொகுப்பே இந்த சரிதை!
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.