Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

புரூஸ் லீ சண்டையிடாத சண்டை வீரன்

(0)
Price: 250.00

Author
Author
Abilash
Weight
360.00 gms
ஒரு சினிமா ஸ்டண்ட் கலைஞன் என்ற அளவில் தான் நாம் புரூஸ் லீயை புரிந்து வைத்திருக்கிறோம். இந்நூல் முதன்முறையாக புரூஸ் லீயை ஒரு மகத்தான சண்டைக்கலைஞனாக, மேதையாக, ஜென் ஞானியாக, உலகம் முழுக்க தற்காப்புக் கலைப் படங்களுக்கு புதுப்பாதை அமைத்தவனாக, எழுத்தாளனாக, பெரும் வாசகனாக, முப்பத்து மூன்று வயதுக்குள் புகழ், பணத்தின் உச்சத்தை அடைந்து விட்டு அதனாலேயே வெறுமையடைந்தவனாக, காதலின் உன்மத்துக்காக தான் அடைந்த அத்தனையையும் பலி கொடுத்தவனாக நாம் முற்றிலும் அறியாத ஒரு புது சித்திரத்தை தருகிறது. ஒரு பெரும் சாதனையாளனின் வலிமைகளுக்கு நிகராக அவனது பலவீனங்களையும் சமரசமின்றி அலசுகிறது. அவன் இங்கு உன்னதங்களுக்கும் கீழ்மைகளுக்கும் இடையே ஊசலாடும் ஒரு ஆன்மாவாக நம் முன் தோன்றுகிறான்.

புரூஸ் லீ கண்டுபிடித்த ஜீத் குனே டூ எனும் சண்டைக்கலையின் நுட்பங்களை அவரது படங்களின் காட்சிகள் கொண்டு விளக்குகிறது. தமிழ் சினிமாவில் ரஜினியின் படங்களில் இருந்து ”முகமூடி” வரை புரூஸ் லீயின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என பேசுகிறது. மேலும் ஏராளமான் சுவாரஸ்யமான தகவல்களுடன் சண்டைப்பிரியர்கள், தத்துவ நாட்டம் உள்ளவர்கள், சினிமா ரசிகர்களில் இருந்து ஒரு சாதனையாளனின் வாழ்வை அறிய விரும்புபவர்களில் இருந்து அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வாசல்களை இந்த நூல் திறந்து வைக்கிறது
No product review yet. Be the first to review this product.

Related Products

Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.