கருப்பு நிறத்தை தங்கள் மீதான சாபமாகக் கருதும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெளுப்பாக இருக்கும் ஹீரோக்கள் உடனடியாகக் கவனம் ஈர்க்கிறார்கள். சிவப்பாக மழு மழு முகத்தோற்றத்தில் சுருள் முடியோடு இருப்பது நடிகராவதற்கான முதல் தகுதியாகத் தமிழ் சினிமாவில் இருந்தது! கருப்பாக இருக்கும் நடிகர்களின் வாய்ப்பு ஆரம்பக் காலகட்டத்திலேயே தட்டிக் கழிக்கப்பட்டது!
வெள்ளை, சிவப்பு நிறம் மீதான ஈர்ப்பு தியாகராஜ பாகவதர், எம் ஜி ஆர் எனக் காலகாலமாகத் தொடர்ந்தது. வெகு ஜனங்களை ஈர்க்கக் கூடிய வசீகரம், சண்டையில் சாகசம், நகைச்சுவை நடிப்பு இவற்றில் திறமை கைவரப் பெற்றால் 'கருப்பு ஹீரோவும்' சூப்பர் ஸ்டார் ஆகலாம் என ரஜினி நிரூபித்தார். அவருக்குப் பிறகு விஜய் அதை செய்து காட்டியிருக்கிறார்...!
மக்களின் வாழ்க்கையில் நீங்காத அங்கமாக விளங்கும். சினிமாத் துறையில், வெள்ளிக்கிழமை தோறும் புதுப்புதுப் படங்களும், புதிய புதிய முகங்களும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், தமிழ் சினிமாவிலும் தமிழ் ரசிகர்களின் மனதிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பது என்பது, சவாலான விஷயம் தான்!
இந்தச் சாதனையை சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார் விஜய். ரசிகர்களால் 'தளபதி' எனச் செல்லமாக அழைக்கப்படும் விஜய், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்து 26 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
No product review yet. Be the first to review this product.