/files/fzpDTXSf9mYI/8bdb6ed4-ceaf-4f3c-9e6c-c5e03d42d88f-03-11-2020,17:00:00_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

உயிர்வாசம்

(0)
Price: 400.00

In Stock

Book Type
நாவல்
Publisher Year
2019
Number Of Pages
433
Weight
558.00 gms
Boat People என்று அடையாளப்படுத்தப்படும் அகதிகளுடைய வாழ்நிலைமைகளின் சித்திரமே இந்த நாவல் . தமிழ் சூழலுக்கு இது இன்னொரு வாசல் . இந்த வாசலில் புதிய அறிதல்களையும் அனுபவத்தையும் உண்டாக்குகிறார் தாமரைச்செல்வி . வன்னிச் சூழலை தன்னுடைய எழுத்துக்களில் முதற்கவனமாகக் கொண்டு எழுதிவந்த தாமரைச்செல்விக்கும் இது புதிய அனுபவம் தாய் நிலத்தில் வாழமுடியாதென்ற நிலை உலகெங்கும் புகலிடம் தேடி பயணிப்போரை உற்பத்தி செய்கிறது . இப்படி புகலிடம் தேடி பயணிப்போரின் வாழ்க்கைக் கதைகள் முடிவற்றவை . அவற்றின் துயர நிழல் இந்த பூமியை அழுத்தக்கூடிய அளவுக்கு பாரமானது . இதில் படகு மூலமாக ஆபத்தான வழியில் பயணம் செய்து அகதித் தஞ்சம் கோருவதும் , அதை ஏற்க முடியாதென அரசுகள் மறுப்பதும் வலியின் உச்சம் . இந்த நிராதரவின் தத்தளிப்பு சக மனிதர்களை உலுக்குவது . இந்த நாவலிலும் இதுவே மையம் . பொருளாதார பிரச்சனைகளும் வளர்ச்சியும் அவற்றை முறைப்படுத்தும் போது உண்டாகும் குறைபாடுகளும் அரசியல் உட்பட பல்வேறு நெருக்கடிகளையும் சம அளவி ல் உருவாக்கி அகதிகளை உற்பத்தி செய்கின்றன . இதில் ஒரு தரப்பினரே இந்த நாவலிலும் உள்ளனர் . இவர்கள் இலங்கையில் வன்னியிலிருந்து புறப்பட்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் மனிதர்கள் . இவர்கள் பயணிக்கும் இந்து மகா சமுத்திரத்திலிருந்து பசுபிக் மகாசமுத்திரம் வரையில் நிகழும் மாபெரும் அனர்த்த நாடகத்தின் ஒளியும் நிழலும் இந்த நாவலின் உடலாகவும் உயிராகவும் கொண்டுள்ளன . கருணாகரன்
No product review yet. Be the first to review this product.
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
Pure Cinema Book Shop © 2016
Powered by Gokommerce
× The product has been added to your shopping cart.