வாழ்கையை நிமிடங்களுக்குள் அடைத்துவிட முடியாது என்கிறார் ஹங்கேரிய திரை இயக்குநரான போல தர். நீண்டு விரியும் காட்சிகளைக் கொண்ட இவரோடைய திரைப்படங்கள்க் காண்பது தியான நிலைக்கு ஒப்பானது என்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள். மைக்கேல் ஹினோகேவின் திரைப்படங்கள் ஒருபோதும் முடிவுறுவதில்லை. ஒரு படைப்பாளியாக தனது திரைபடங்களை முடித்துவிடுவதில் துளி நியமும் இருப்பதில்லை என்கிறார் இவர். தார்க்கோவ்ஸ்கி, திரைப்படங்களை புரிந்துக்கொள்ளத் தேவையில்லை; சினிமா என்பது ஒருவகையான தரிசனமே என்கிறார்.
மேதைகள் என்று நாம் வியக்கின்ற ஒவ்வொரு இயக்குனரும் அவர்களுகே உரித்தான தனித்துவத்துடன் தம் படைப்புகளை விட்டுச் செல்கின்றார்கள்.
வாழ்கையின் மீதான தங்களது விசாரிப்புகளையும், உலகை உலுக்குகின்ற சம்பவங்களுக்கான தங்களின் எதிர்வினைகளையும் தமது படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.
No product review yet. Be the first to review this product.