கவர்ச்சிதான்,வேறென்ன தெரியும் சிலுக்கைப் பற்றி? ஒரு தலைமுறையே கிறங்கடித்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டவரின் வாழ்வை ஆராயும் போதுதான், ‘அவருக்குள் வசித்துவந்த’ இன்னொரு சிலுக்கு அகப்பட்டார்.
தமிழ் சினிமாவில் வந்துபோன கவர்ச்சி நடிகைகளுள் நின்று ஆடி ஜெயித்தவர் சிலுக்கு ஸ்மிதா. அவரது வாழ்விலும் மரணத்திலும் நிறையவே உண்டு மர்ம முடிச்சுகள். ஆராய்ந்து பார்த்தால் வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்.
திரையுலகில் சிலுக்குக்கு நண்பர்களாக இருந்தவர்கள் குறைவு.சிலுக்கு தன் பாதுகாப்புக்குப் போட்டுக்கொண்ட இரும்புத் திரை அது என்பார்கள். ஆனால், நெருங்கியவர்களுக்கு அவர் ஒரு தேவதையாகத்தான் இறுதிவரை இருந்திருக்கிறார்.
ஏழைமை,கடும் உழைப்பு,திடீர் வாய்ப்பு,பெரும் புகழ்,பணம்,அந்தஸ்து ஆகவே காதல்,பின்னர் கசப்பு,மன முறிவு,தற்கொலை-பல நடிகைகளின் வாழ்க்கை இந்தத் திரைக்கதையில் அமைந்திருக்கலாம்.ஆனால்,சிலுக்கின் மரணம் உலுக்கியது போல, இன்னொன்றில்லை.
No product review yet. Be the first to review this product.