உலக சினிமாக்களை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள இயக்குநர்களில் பலர் உலகத் திரை வரலாற்றில் முக்கியமானவர்கள்.தங்களுடைய படைப்புக்கள் மூலம் கவனத்தைப் பெறுவதை விட மாற்றங்கள் விளைவதையே மகிழ்ச்சிக்குரியதாக நினைக்கும் மனதுடையவர்கள்.
உலகம் முழுவதும் மனிதர்களுக்கு ஒரே விதமான உணர்ச்சிகள் தானே உள்ளது.சினிமா ரசனையை கட்டமைக்க உதவிய பல இயக்குநர்களை மரியாதையுடன் நினைத்துக் கொள்கின்ற அதே வேளையில் எனக்குகந்த இயக்குநராக ஜிம் ஜாமர்ஷ் உள்ளார் என்பதை அவர்கள் படங்களின் மூலமாக அறிந்து கொண்டேன்.அவரது திரைப்படங்கள் மேலோட்டமாக தெரிவதை விடவும் அவர் அமைத்த களன்கள் அவர் திரைப்படங்களில் காட்சிப்படுத்தும் மனிதர்கள் அனைவரும் சாமானியர்களே.ஆனால் அந்த சராசரி வாழ்க்கையிலும் சாதாரண மனிதர்களிடம் தென்படும் அசாதாரண விஷயங்களை மிக இயல்பாக கோடிட்டுக் காட்டியிருப்பார்.அவரது சில திரைப்படங்கள் அங்கதமும், நகை முரண்களும் கொண்டதாக இருக்கும்.அவர் இதுவரை இயக்கியுள்ள அனைத்துப் படங்களையும் பார்த்து விட்டேன். ஒரு படைப்பாளிகளாக அவர் உலகிற்கு தோற்றுவிக்கும் திரைப்படலம் ஆழமானது.
-உமா பார்வதி
No product review yet. Be the first to review this product.