மக்கள் திலகம் என்னும் மாமனிதருடன் 35 ஆண்டுகளுக்கு மேலாக பழகிய,எம்.ஜி.ஆர் பிக்ஸர் ரவீந்தர் தாம் கண்டு நெகிழ்ந்த எம்.ஜி.ஆர்.அவர்களுடன் தமக்கேற்பட்ட அனுபவ நிகழ்ச்சிகளை நேர்த்தியான நடையில் ‘நெஞ்சில் நிறைந்த பொன்மனச் செம்மல்’ என்னும் தலைப்பில் ‘பொம்மை’ யில் 1992ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் தொடர்ந்து 30 இதழ்களில் தொடராக எழுத ,அது வாசகர்களிடம் மட்டுமல்ல படவுலகினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. அன்று அந்த தலைமுறையினர் படித்து பாராட்டி மகிழ்ந்த இப்புத்தகத்தை தொடர்ந்து வரும் தலைமுறையினரும் படித்து மகிழ வேண்டும் என்னும் நோக்கத்தில் மறு பதிப்பு செய்யபட்டுள்ளது.எம்.ஜி.ஆர் ஏன்னும் அந்த மாமனிதரை பற்றி மற்றவர்கள் சொல்ல கேட்டதையும்,படித்ததையும் கொண்டு பல நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன,ஆனால் எம்,ஜி,ஆருடன் பல்லாண்டுகள் உடனிருந்து பழகிய ஒருவர் எழுதுகிறார் என்றால் அதற்குள்ள சிறப்பே தனித்துவமானது.
No product review yet. Be the first to review this product.