இன்றைக்கு உலக சினிமாக்களைக் குறித்த எண்ணற்ற பிரதிகள் தமிழ் வாசகனுக்கு முன் வந்து குவிகின்றன. ஒவ்வொரு வரும் தத்தமது பாணியில் தாம் பார்த்த படங்களைக் குறித்துப் பேச முனைகின்றனர். இதிலிருந்து கருணாவின் அணுகுமுறை பெருமளவு வித்தியாசப் படுகிறது. குறிப்பாக அவர் பிரயோகிக்கிற மொழி. தேர்ந்த மொழிவாயிலாக அவர் சில படங்களை குறித்த பிரம்மிப்பை வாசகனுக்கு கடத்துகிறார். ஒரு நூற்றாண்டு காலத்து முக்கிய திரைப்படங்களின் கதைகளை, முக்கியத்துவத்தை கருணாவின் சொற்களால் வாசிக்க சுகானுபவமாக உள்ளது. உலக சினிமாக்களைக் குறித்து இதை விட சுவாரசியமாகக் கதைக்க முடியுமெனத் தோன்றவில்லை
No product review yet. Be the first to review this product.