ஜூன் 26, 1995ஆம் ஆண்டு, சேலம் மாவட்டத்தில் கட்டிநாய்க்கம்பட்டி என்ற ஊரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் தனம் என்ற தலித் சிறுமி, தன் தாகத்திற்காக அங்கிருக்கும் ஒரு குடத்தில் தண்ணீர் குடிக்கிறாள். ஆனால், உயர்சாதியினர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே அந்தக் குடத்தில் தண்ணீர் கு டிக்கவேண்டுமென்பதாகவும், அதை தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கப்பட்டவள் குவளையைத் தொட்டுவிட்டதாகக் கூறி ஆசிரியரால் தண்டிக்கப்படுகிறாள். விளைவு அவளது ஒரு கண் பறிபோகிறது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஞான ராஜசேகரன் இயக்கிய படம்தான் ஒரு கண் ஒரு பார்வை.
தேசிய விருது பெற்ற, 30 நிமிடங்கள் கால அளவு கொண்ட இந்தக் குறும்படத்தில் பணியாற்றவர்கள் யாவரும் பெரிய திரையில் புகழுச்சியில் இருப்பவர்களே. உதாரணமாக, இசை:இளையராஜா, ஒளிப்பதிவு: பீ.கண்ணன், படத்தொகுப்பு: பீ.லெனின் - விஜயன்.
தீண்டாமை தொடர்ந்திருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்திலும், இது போன்ற படங்களைப் பார்ப்பதும், அது குறித்து விவாதிப்பதும், அதை மக்களிடம் கொண்டு செல்வதுமே கூட களச்செயல்பாடுதான்.
No product review yet. Be the first to review this product.