உலக சினிமா 100 என்ற பெயரில் பல சினிமா ரசிகர்களும் ஆய்வாளர்களும் பட்டியல் கொடுத்திருக்கிறார்கள்.அதன் பொதுவான தன்மை என்னவென்றால்,அந்தப் பட்டியலில் 90 படம் ஹாலிவுட் படமாக இருக்கும். அதுவும் பார்த்தால் காட்ஃபாதர்,ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், ஸ்டார் வார்ஸ்,டைட்டானிக்,க்ளாடியேட்டர் என்று நாம் மனப்பாடமாகச் சொல்லி விடக் கூடியதாகத்தான் இருக்கும்.ஆனால் உலகம் என்பதோ சினிமா என்பதோ அமெரிக்காவுடன் முடிவதில்லையே?
ஜப்பானில் மட்டுமே அகிரா குரஸவா, யசுஜிரோ ஓஸு போன்ற ஐம்பது மேதைகள்;ரஷ்யாவில் ஐஸன்ஸ்டைன், போலந்தில் ஆந்த்ரே வாய்தா, ஹங்கேரியின் சொல்த்தான் ஃபாப்ரி,மிக்லோஸ் யான்ஸ்கோ,ஃப்ரான்ஸில் ஜான் லுக் கொதார் என்று ஏராளமான பேர் இருக்கிறார்கள்.ஜெர்மன் சினிமாவுக்குத் தனியாகவே ஒரு புத்தகம் எழுத வேண்டும்.தென்னமெரிக்கா இன்னொரு பிரம்மாண்டம்.
சினிமா, இலக்கியம், கால்பந்து -இந்த மூன்றும் அந்த மக்களின் வழிபாட்டுக்குரிய விஷயங்கள்.இந்தப் பின்னணியில்தான் உலக சினிமாவின் மகத்தான சில படங்களைப் பற்றி இங்கே நாம் பார்க்கப் போகிறோம்.
No product review yet. Be the first to review this product.