நீதியும், அறமும், வாழ்வதற்கான உரிமையும் மறுக்கப் பட்டவர்களும், வன்புணர்வின் இறுதியில் சாலையின் ஓரம் கழிவென வீசப்பட்டவர்களும், உயிரென இருந்தவர்களை கொலைகளுக்கு பலிகொடுத்து விட்டு நியாயம் கேட்பவர்களும், இருக்கும் கொஞ்சநஞ்ச வாழ்வையும் கையில் பிடித்துக்கொண்டு இழந்த சொத்துக்களை மீட்டெடுக்கப் போராடுபவர்களும், தோல்வியடைந்த திருமணங்களினால் கைவிடப்பட்டவர்களும், அவர்கள் தூக்கிச் சுமக்கும் குழந்தைகளும், கடைசிக்காலத்தில் கைவிட்டுப்போன பிள்ளைகளிடம் கையேந்தும் வயதானவர்களும் என…
போர்க்களம்போல காட்சியளிக்கும் நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும்தான் அனுதினமும் கொத்துக்கொத்தாக குவிகிறார்கள். அவ்வாறு குவிகின்றவர்களின் இறுதி நம்பிக்கையும் அரசினால், அதிகாரங்களினால், அலட்சியங்களினால், சட்டங்களின் நுணுக்கங்களினால் நெரித்துக் கொல்லப்படும்போது, சிவப்புநிறக் கட்டிடங்களான இவை எனக்கு, குறிஞ்சிநில முருகன் அமர்ந்திருக்கும் செங்கோட்டு யானைகளாகவும், அசுரர்களின் ரத்தத்தால் மூழ்கிப்போன அதன் கூர்மையான தந்தங்களாகவும்தான் தெரிகின்றன.
No product review yet. Be the first to review this product.