திரையில் தோன்ற ஒற்றை வாய்ப்பு கிடைக்குமா என்று எம்.ஜி.ஆர். ஏங்கிக்கொன்டிருந்தது ஒரு காலம். அவருக்காக எல்லா வாய்ப்புகளும் வரிசையாகத் தவம் கிடந்தது பிற்காலம். அது எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல ,ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் பொற்காலம்! இன்னமும் எம்.ஜி.ஆர். பார்முலா இல்லாமல் ஒரு படத்தைக் கூட வசூல் ரீதியான வெற்றிப்படப் பட்டியலில் சேர்க்கமுடியாது.
சாதனைகள், சோதனைகள், வெற்றிகள், தோல்விகள், சர்ச்சைகள், சாகசங்கள், சறுக்கல்கள், திருப்பங்கள் என எல்லாம் கலந்த எம்.ஜி.ஆருடைய வாழ்க்கையை நேர்மையும் நேர்த்தியும் கலந்து பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் பா.தீனதயாளன். தமிழ் சினிமாவைப் பற்றிய அதி முக்கியத் தகவல்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கும் அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரின் பதிவு இது என்பது இந்தப் புத்தகத்தின் கூடுதல் சிறப்பு.
No product review yet. Be the first to review this product.