வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் ,திரை உலகை திரும்பி பார்க்கும் போது எவ்வளவோ கலைஞர்கள்,அவர்கள் வாழ்கையில் எவ்வளோ சம்பவங்கள்..மறக்க முடியாத திரையுலக மாமணிகள் என்ற இந்த நூலில் மனிதர்கள் சம்பவங்கள்.ஒளவை டி.கே.சண்முகம்,ஏ.பி.நாகராஜன்,டி.ஆர்.சுந்தரம், என் இவர்களைப் பற்றிய செய்திகள் படிப்போரை நிச்சயம் கவரும்.எம்.ஜி.ஆரின் திறமை நுணுக்கம்,கலைவாணரின் தொலைநோக்கு,கே.சாரங்கபாணியின் நாட்டுப்பற்று.கே.ஆர்.ராமசாமியின் பண்பு நலன் ,ஜெய்சங்கரின், நன்றி உணர்வு,சீர்காழி கோவிந்தராஜனின் பாட்டுவளம்,துன்பத்திலும் சிரிப்பூட்டிய சுருளிராஜன்,சாவித்திரியின் தொழில் பக்தி,கண்ணம்பாவின் நடிப்பு திறன்,பானுமதியின் பன்முக ஆற்றல் என இந்நூல் முழுவதும் திரை மாமணிகள் பலரை பற்றிய தகவல்களாக பரிமளிகின்றன.இந்த நூலில் இடம் பெற்ற பல கலைஞர்கள் நம்மிடம் இல்லை ஆனால் அவர்களுடன் இருந்து சில அனுபவங்களை நாம் நேரில் பெறுவதைப் போல் உணர்கிறோம்.இந்த வெற்றிக்கான காரணம் திரு.நாகை தருமன் அவர்களின் எழுத்து திறன்.இன்றைய தலைமுறையினர் குறிப்பாக தமிழ்த் திரை உலகினர் ,படித்து உணரவும்,உணர்ந்து தெளியவும்,தெளிந்து வாழவும் திரை மாமணிகள் பலரது வாழ்கை,இதில் பாடமாய் அமைந்துள்ளது.
No product review yet. Be the first to review this product.