கதாநாயக-வில்லன்கள் (anti-heroes) வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவசமூட்டுபவர்கள்.மார்லன் பிராண்டோ,ரஜினிகாந்த்,சத்யராஜ்,சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இரு பிரச்சினைகளில் கமல்ஹாசன் தேர்ந்து கொண்ட கதாநாயக-வில்லன் பாத்திரங்கள் என்பது அவரது ஹேராம்,தசாவதாரம்,உன்னைப்போல் ஒருவன் மற்றும் விஸ்வரூபம் திரைப்படங்களில் இடம்பெறும் கதாநாயகவில்லன் பாத்திரங்கள் மட்டுமல்ல;குறிப்பிட்ட இரு பிரச்சினைகளைப் பொறுத்து நிஜவாழ்விலும் கமல்ஹாசன் கதாநாயக-வில்லன்தான்.கமல்ஹாசனே இந்த விளையாட்டைத் தேர்ந்து கொண்டிருப்பதால் அவரால் இந்தக் கதாநாயக-வில்லன் விளையாட்டில் இருந்து வெளிவர முடியாது.
No product review yet. Be the first to review this product.