இன்று புதிதாய்ப் பிறந்தேன்
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

இன்று புதிதாய்ப் பிறந்தேன்

Author
Weight
460.00 Gms
200.00
திரைப்படத் துறையில் எந்த ஆர்வமும் ஈடுபாடும் இல்லாமல் இருந்த மிருணாள் சென்,இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் போற்றப்படும் ஒரு இயக்குநராக உயர்ந்த கதையை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இந்த நூலில் அவரே பதிவு செய்துள்ளார்.

துடிதுடிப்பான இளமைப் பருவத்தில் இவர் வாசித்த சினிமா பற்றிய ஒரு புத்தகம்,திரைப்படக் கடலில்,இவரை முத்துக்குளிக்க வைத்தது.அன்று தொடங்கிய கலைப் பயணத்தில் 28 திரைப் படங்களை மிருணாள் சென் இயக்கியுள்ளார்.வங்காளம்,ஹிந்தி,ஒ¡¢ய மற்றும் தெலுங்கு மொழிகளில் இவர் உருவாக்கிய திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது.

ஆனால் பல படங்கள் சொந்த பூமியில் வசூலில் தோல்வியடைந்து,இந்த சிருஷ்டி கர்த்தாவைத் துவள வைத்தன.கடுமையான போராட்டத்திற்கிடையே,தனது தனித்தன்மையை தொலைத்துவிடாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் இமாலய சாதனை படைத்தவர்,மிருணாள் சென்.

சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜியுடன் இணைந்து பாடுபட்ட குடும்பத்தில் பிறந்து,இடதுசா¡¢ சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட மிருணாளின் திரைப்படங்கள் சர்ச்சைப் புயலைக் கிளப்பின.

சாமானிய மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை யதார்த்தமாக,வெகு இயல்பாகச் சித்தா¢ப்ப தில் மன்னாதி மன்னனாகத் திகழ்ந்தவர்,வங்கம் தந்த இந்த வெள்ளித் திரைச் செம்மல்.

நான்கு தடவை ஸ்வர்ண கமல் விருதுகளையும் சர்வதேச திரைப்பட  விழாக்களில் தங்கம்,வெள்ளி விருதுகளையும் வென்றுள்ள மிருணாள் சென்னுக்கு இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாஹேப் பால்கே விருது 2003-ல் வழங்கப்பட்டது.

சினிமாவையே சுவாசித்த இந்தப் படைப்பாளியின் வாழ்க்கையில் ஊடும் பாவுமாக சினிமா கலந்துவிட்ட கதையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது,இன்று புதிதாய்ப் பிறந்தேன்...!

இதில் இந்திய சினிமாவை மட்டுமல்லாமல் உலக சினிமாவையும் கண்டு ரசிக்க முடியும்.

இது புத்தகமல்ல..!ஒரு திரைக் காவியம்..!

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.