ஐரோப்பாவில் அமெரிக்க வணிகப் பொழுதுபோக்கு சினிமாக்கள் உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருந்த அளவுக்கு அதிகமான கலாச்சாரத் தாக்கங்களை மட்டுப்படுத்தவே எதிர் குரலாகக் கிளம்பியது திரைப்பட விழாக்கள்.
தொடங்கப்பட்ட போது அதற்கானதாக இல்லை என்றாலும் அடுத்த ஒரு சில பத்தாண்டுகளிலேயே ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர் கலாச்சாரங்களை அமெரிக்கத் திரைப்படங்கள் சிதைத்துவிடாமல் இருக்க முன்னெடுக்கப்பட்டவைகள் திரைப்பட விழாக்கள்.திரைப்பட விழாக்களின் தொடக்கம் குறித்தும் ஐரோப்பாவின் மிக முக்கிய நான்கு திரைப்பட விழாக்களின் வரலாறு குறித்தும் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் பேசியிருக்கிறோம் நானும், சக எழுத்தாள நண்பருமான வர்ஷினியும். அதன் வழி திரைப்பட விழாக்கள் எதற்கானது, அது எப்படியான சாத்தியங்களை உலகம் முழுவதிலும் உள்ள சுயாதீனத் திரைக் கலைஞர்களுக்கு உண்டாக்கிக் கொடுக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறோம். அடுத்த அத்தியாயத்தில் திரைப்பட விழாக்களுக்கு எப்படித் தயாராவது என்பதைக் குறித்தும் எந்தெந்த வழிகளில் திரைப்பட விழாக்களுக்கு நம்முடைய திரைப்படங்களைச் சமர்ப்பிப்பது என்பதைக் குறித்தும் பேசியிருக்கிறோம்.
-நவீன அலெக்சாண்டர்
வர்ஷினி
No product review yet. Be the first to review this product.