ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை

இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் மேற்பார்வையில், இந்தியாவின் மோஸ்ட் வான்டெட் ஒளிப்பதிவாளர் திரு அவர்களின் ஒரு நாள் சினிமா பயிற்சிப்பட்டறை.

07-07-2019, ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

நன்கொடை: 3500 ரூபாய் (மூவாயிரத்து ஐநூறு ரூபாய்) மதிய உணவுடன்

தலைப்பு: ஒளிப்பதிவு ஷாட் பிரிக்கும் முறை, படப்பிடிப்பு தளத்தில் உருவாக்கப்படும் காட்சி, ஷாட், லைட்டிங், கோணங்கள் பற்றிய செய்முறை பயிற்சி.

முன்பதிவு செய்ய: 9840644916, 044 48655405

நண்பர்களே, இந்திய சினிமாவின் ஆளுமைகளாக விளங்கும் பெரும்பாலான ஒளிப்பதிவாளர்களை உருவாக்கிய தமிழ் சினிமாவின் பொக்கிஷங்களில் ஒன்றாக விளங்கும் திரு. பி.சி ஸ்ரீராம் இந்தியாவிலியேயே முதல் முறையாக, தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைக்கும் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறையின் மேற்பார்வையாளராகவும், இறுதியில் சான்றிதழ் வழங்கவும் இருக்கிறார். இந்த ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறையை நடத்த இருப்பவர் இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளரும், இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகளில் பணியாற்றி வருபவருமான திரு என்கிற திருநாவுக்கரசு அவர்கள். ஹே ராம், ஆளவந்தான், லேசா லேசா, கஞ்சிவரம் போன்ற தமிழ்ப்படங்களில், க்ரிஷ் 3, போன்ற இந்திப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கும் இவர், 24 படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காக தேசிய விருது பெற்றவர். அண்மையில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இவரே.

திரு அவர்களின் ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை, அதற்கு பி.சி. அவர்களின் மேற்பார்வை என்பது இந்திய சினிமாவின் குறிஞ்சிப்பூ போன்ற செயல். இருவரும் மிக பிஸியான தங்கள் பணிகளுக்கிடையிலும், தமிழ் ஸ்டுடியோவின் தொடர் நிதி சிக்கலுக்காக இந்த ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறைக்கு சம்மதித்துள்ளார். அவர்களுக்கு உங்கள் சார்பாகவும் தமிழ் ஸ்டுடியோ சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தகைய ஒரு வாய்ப்பு, பெரும் பல்கலைக்கழகங்கள், அல்லது கல்லூரிகளில் கிடைக்க நாம் லட்சங்களை காட்டிக்கொடுக்க வேண்டும். ஆனாலும் இரு பெரும் ஆளுமைகள் நமக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி தந்து சினிமா கல்வியியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளார்கள். சினிமாவில் ஒரு காட்சியை எப்படி ஷாட் பிரித்து, லைட்டிங் அமைத்து படம் பிடிப்பார்களோ, அப்படி ஒரு செய்முறை பயிற்சியோடு இந்த பயிற்சி மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. செலவுகளை கணக்கிட்டு 3500 ரூபாய் நன்கொடையாக கோரப்பட்டுள்ளது. உதவி தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமா ஆர்வலர்கள், சினிமா படிக்கும் மாணவர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

Details

  Start Date : 26-08-2019

  End Date : 30-11-2019

  Event Location : Chennai

  Event Venue : பயிற்சிப்பட்டறை