தமிழ் ஸ்டுடியோவின் - Learn from Masters - தொடர் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோவின் - Learn from Masters - தொடர் திரையிடல்

29-09-2019, ஞாயிறு காலை 10 மணிமுதல்

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/<wbr>bMYcANLkNG42

படங்களை பார்த்து சினிமா உருவாக்கத்தை கற்றுக்கொள்வதற்கான படங்களை தமிழ் ஸ்டுடியோ உங்களுக்காக தேடி தேடி திரையிடுகிறது. கிட்டத்தட்ட இது சினிமா கல்விக்கு சமம். இந்த படங்கள் யாவும் பரிச்சார்த்த முயற்சியில் சினிமா உருவாக்கத்திற்கு உதவும். தமிழ் ஸ்டுடியோவின் இத்தனை ஆண்டுகால பயணத்தில் திரைப்படம் எடுக்க நமக்கு உதவும் படங்களின் பட்டியல் தயார் செய்து அதனை உங்களுக்காக பொது திரையிடலாக நடத்துகிறோம். இந்த Learn From Masters தொடர் திரையிடலில் தொடர்ச்சியாக தமிழ் ஸ்டுடியோ திரையிடும் அனைத்துப்படங்களையும் தவறாது பாருங்கள். திரைப்ப்ட உருவாக்கம், ஒரு படத்தை எப்படி எடுப்பது போன்ற உங்கள் ஐயங்களுக்கு விடை கிடைக்கும்.

இயக்கம், ஒளிப்பதிவு, இசை, ஒலியமைப்பு, படத்தொகுப்பு, திரைக்கதை என ஒவ்வொரு பிரிவையும் நீங்கள் கற்றுக்கொள்ள ஏதுவாக இந்த திரையிடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த இயக்குநர்களின் படங்களை எந்த வரிசையில் பார்க்க வேண்டும், என்னென்ன படங்களை பார்க்க வேண்டும், போன்ற பலவற்றையும் தமிழ் ஸ்டுடியோவின் சினிமா கல்வி ரீதியிலான ஆய்வின் அடிப்படையில் இந்த திரையிடல் நடைபெறுகிறது. ஆனால் மொத்தமாக அத்துனை படங்களையும் பார்க்க வேண்டும். 50 நண்பர்கள் மட்டுமே வசதியாக அமர்ந்து பார்க்க இயலும். எனவே ஞாயிறு காலை 9.30 மணிக்குள்ளாக வரும் நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி. முதலில் வந்து உங்கள் இருக்கையை உறுதி செய்யுங்கள். 10.15 க்கு மேல் யாருக்கும் அனுமதி கிடையாது. சினிமா கற்க சினிமாவை பார்க்கும் விதமும் மிக முக்கியம். இந்த திரையிடல் உங்களுக்கு சினிமா கலாச்சாரத்தையும் பகிர இருக்கிறது.

29.09.2019 ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 6.30 வரை

காலை 10 மணிக்கு:
Aguirre, the Wrath of God(1972)
Directed by Werner Herzog
Duration: 1hr 34mins

காலை 11.35 மணிக்கு:
Heart of Glass(1976)
Directed by Werner Herzog
Duration: 1hr 34mins

மதியம் 1.10-1.50 மதிய உணவு இடைவேளை (40 நிமிடங்கள்)

மதியம் 1.50 மணிக்கு:
My Son, My Son, What Have Ye Done?(2009)
Directed by Werner Herzog
Duration: 1hr 31mins

மதியம் 3.25 மணிக்கு:
Queen of the Desert(2015)
Directed by Werner Herzog
Duration: 1hr 31mins

மாலை 5.00 மணிக்கு:
Salt and Fire(2016)
Directed by Werner Herzog
Duration: 1hr 38mins

நன்றி: LARAKIT Gardens

இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
கூகுள் மேப்: https://goo.gl/maps/<wbr>bMYcANLkNG42

அனைவரும் வருக... அனுமதி இலவசம்...
சினிமாவை சுயமாக கற்போம்...

Details

  Start Date : 29-09-2019

  End Date : 29-09-2019

  Event Location : Vadapalani

  Event Venue : Pure Cinema Bookshop