எனக்குள் இருக்கும் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய என் மண்ணின் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன். நடந்த நிகழ்வுகள் என் புனைவின் உச்சமாக இருந்த போதும்,என் கதைமாந்தர்கள் அனைவரும் உண்மையானவர்கள். நேர்மையானவர்கள். காலத்தை நிறுத்தி வைக்க முடியாததால், என் கதைகளின் வழி சில மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறுத்தியுள்ளேன். இதை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம், அவர்களின் வாழ்க்கைக்குள் நீங்கள் விரும்பியபோதெல்லாம் காலம் கடந்து பயணிக்கலாம். நான் என்பது யாரோ… ஆனால் நாங்கள் என இக்கதையில் வருபவர்கள் உங்களுக்குள் ஏதோ ஒன்றை விதைக்கலாம். உங்களை அழவோ, சிரிக்கவோ, ஆதங்கப்படவோ, கோபப்படவோ வைக்கலாம். இதில் எது நடந்தாலும், இவனுக்கு மகிழ்ச்சி. - தெரிசை சிவா
No product review yet. Be the first to review this product.