உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளினுடைய வாழ்க்கை வரலாறு. தன் வாழ்க்கை அனுபவங்களை திரைபடங்களில் சித்திகரித்து பார்வையாளர்களை ஒரே நேரத்தில் சிரிக்க, சிந்திக்க, அழவும் வைத்த சாப்ளின் கதை, திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் மேதைமை பெற்றிருந்த சாப்ளின், ஒடுக்குமுறை மற்றும் யுத்தத்திற்கு எதிரான அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட்டார்.
இந்த மகாகலைஞரின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்காக எழுதியிருப்பவர் கேரளத்தின் புகழ் பெற்ற சிறார் இலக்கியவாதியான பி.பி.கே.பொதுவால். கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில், திருக்கரிப்பூரில் பிறந்தவர். அறிவியல் நூல்கள் உட்பட நிறைய நூல்கள் எழுதியுள்ளார். மிக அதிக விருதுகள் பெற்றவர். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, இலக்கிய படைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
No product review yet. Be the first to review this product.