/files/fzpDTXSf9mYI/vaazhnthavar-kettaal-sandhya-pathippagam_FrontImage_177-04-11-2020,18:36:08_100x100.jpg
Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

வாழ்ந்தவர் கெட்டால்

(0)
Price: 100.00

In Stock

Book Type
நாவல்
Publisher Year
2020
Number Of Pages
82
Weight
159.00 gms
இந்த நாவல் தஞ்சாவூர் நகரத்தில் தொடங்கி அங்கேயே முடிகிறது. அதாவது 70 ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சாவூர். அப்போது காவிரி கரை புரண்டு ஓடியது. ஹோட்டல்களில் டிகிரி காபி கிடைத்தது. ஐப்பசியில் அடை மழை பெய்தது. வில் வண்டிகள் பண்ணயார்களின் அந்தஸ்தைக் காட்டும் வாகனங்களாக இருந்தன. அப்படியிருந்த தஞ்சாவூரில் நடைபெறுகிறது இந்த நாவலின் கதை.
ஒரு சந்தேகத்தின் விளைவு, ஒரு மரணம்; ஒரு தற்கொலை; மற்றொரு மரணம். சஞ்சலமும் சந்தேகமும் ஒருவனை நிலை குலையச் செய்கிறது. அவன் விரக்தியில் வாழ்கிறான். மன உளைச்சல் ஆட்டிப்படைக்கிறது. அமைதியானவன் ஆவேசப்படுகிறான். ஏதோ ஒரு எண்ணம், ஏதோ ஒரு சந்தேகம் இடைவிடாமல் அவன் இதயத்திற்கு எரிச்சல் ஊட்டி அதை கொதி நிலையிலேயே வைத்திருக்கிறது.
இதற்கு காரணமான ஒரு நபரையோ சூழ்நிலையையோ அந்த மனம் பொறுத்துக் கொள்வதில்லை. மனத்தின் வெளிப்பாடு வார்த்தைகளாய் வந்து கொட்டுகின்றன. அந்த எரிமலையின் தகிப்பை எதிராளியால் பொறுக்க இயலாது. அந்த ஆவேச தாக்குதலும், அவமானச் சொற்களும் சில நொடி நேரங்களில் வாழ்ந்து கெட்ட ஒருவனை ‘இனி வாழ வேண்டாம்’ என்ற முடிவுக்கு கொண்டு செல்கின்றன. வசை பாடியவனும் எதிர்பாராத விளைவுகளில் திகைத்து உறைந்து தன் கணக்கை தீர்க்கும் திசை தெரியாது மன அதிர்ச்சியில் வீழ்ந்து மடிகிறான்.
இந்த நாவல் மனித மனங்களின் சஞ்சலங்களையும் சஞ்சலங்கள் விதைக்கும் சந்தேகங்களையும் சந்தேகங்கள் போடும் விபரீத கோலங்களையும் துல்லியமாகப் பிரதிபலிக்கின்றன.
கொஞ்சம் தஞ்சாவூர்;
கொஞ்சம் வாழ்ந்தவர்கள்;
கொஞ்சம் வீழ்ந்தவர்கள்.
No product review yet. Be the first to review this product.
× The product has been added to your shopping cart.