முள்ளுக்கம்பிகளால் சூழப்பட்ட மனித இருப்பு,
உலக மயமாக்கலிலிருந்து குடும்பம் என்ற ஸ்தாபனம் வரை முதலாளியம் நீட்டியிருக்கும் கொடுமுட்கள்.
கடிகாரத்தின் முட்களால் துரத்தப்படும் வாழ்வு.உழைப்புச் சுரண்டலையே தனது மூலவேராகக் கொண்டு உலகம்பூராவும் வியாபித்துள்ள முதலாளித்துva
முள்விருட்சம் தனது கையடக்க ஸ்தாபனமயமாக்கலை தொழிலாளர் மட்டங்களில் மாத்திரமல்லாது, தொழிலாளர் குடும்பங்களின் இருத்தலையும் தான் கிழித்த நேர்கோட்டின்வழியேதான் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை ஜீவமுரளி கதையின் பல மூலைகளின் நின்று சொல்லியிருக்கிறார்,
அங்கிங்கென நீண்டதூரம் ஓடியோடிக் கதை சொல்லாமல், ஒரு உணவுத் தொழிற்சாலையின் சமையற் கூடத்துக்குள் நின்று மாமிசங்களை வாட்டிக் கொண்டும், மரக்கறிகளை வெட்டி சலாட் போட்டுக்கொண்டும், அதேவேளை கதை மாந்தர்களையும் பெருவெளியில் ஓடவைக்காமல் தனது பக்கத்தில் வைத்துக்கொண்டுமே கதை சொல்கிறார். இவ்வகை கதை சொல்லலானது வாசிப்பையும் அலைக்கழிக்கவில்லை.
No product review yet. Be the first to review this product.