ஐவேளைத் தொழுகை அரபுதேசத்துப் பணம் பிரியாணி போன்ற உணவுக்கலாச்சாரம் என பொதுப்புத்தியில் உறைந்து கிடக்கின்ற இஸ்லாமியர் குறித்த கருத்தாக்கத்தை கீரனூர் ஜாகிர்ராஜாவின் மீன்காரத் தெரு நாவல் கலைத்துப் போடுகிறது. இதில் வரும் மனிதர்களும் இஸ்லாமியர்கள்தான். ஆனால் நிறத்தால், மொழியால், தொழிலால், வறுமையால், காமத்தால், வன்மத்தால் உந்தித் தள்ளப்படும் இவர்களை ஏற்கனவே தமிழில் வெளியாகியுள்ள எந்த படைப்பாக்கங்களிலும் இத்தனை வீச்சத்துடனும் தீவிரத்துடனும் வாசகர்கள் சந்தித்திருக்க இயலாது.
No product review yet. Be the first to review this product.