• நானும் இந்த நூற்றாண்டும்

என்னுடைய அனுபவங்களை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நல்லதோ கெட்டதோ-கூடிய வரை இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.நேர்கோடுகள் என்றும் ஓவியமாகா.குறுக்கும் நெடுக்குமாக,மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது.வாழ்கையும் அப்படித்தான் ஏற்ற இறக்கங்களோடு எழுதப் பெற்ற வரைபடமாக இருக்குமாயின் ,விமர்சனங்களுக்கு உள்ளாகும் அளவு ,அதற்கு ஒரு விலாசம் கிடைக்கிறது.தேங்கிய குட்டைகளைப் பற்றித் தேசங்கள் பேசுவதில்லை ,விழுந்தும் எழுந்தும் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளின் பெயர்களைத்தான் வரலாறு தன் பதிவேட்டில் குறித்து வைக்கிறது.இது என்னைப் பற்றிய சுயவிமர்சனம் தான் ,இருப்பினும் இதைப் படிப்பவர்களுக்கு வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நெஞ்சுரம் கைவரப் பெறும் என்று நான் அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.

Write a review

Please login or register to review

நானும் இந்த நூற்றாண்டும்

  • Rs.350.00