• மன்னவன் வந்தானடி (கே.வி.மகாதேவன் )

திரை இசைத்திலகம் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட திரு.கே.வி.மகாதேவன் நூற்றுக்கணக்கான தமிழ்ப் படங்களுக்கும் தமிழ்  மொழிக்கும் பெருமை சேர்க்கும் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும் இசை அமைத்தவர்.நல்ல பாடல் வரிகள் ,சிறந்த மெட்டுகள்,தமிழ் உச்சரிப்பு மிகச்சிறப்பாக அமைந்த இனிமையான குரல்கள் பாடல்களுக்கு ஏற்ப நடிக்கும் சிறந்த நடிகர்கள் என்று பல வகையிலும் பெருமை ஏற்றவை கே.வி.மகாதேவன் இசை அமைத்த  பாடல்கள்.அவருடைய இசை அமைப்பில் வந்த திருவிளையாடல் ,தில்லானா மோகனாம்பாள்,சம்பூர்ண ராமாயணம் போன்ற திரைப்படங்களும் அவற்றின் பாடல்களும் இன்றும் மக்களின் கவனத்தை கவர்கின்றன.இத்தகைய இசை மன்னரின் வாழ்க்கை வரலாறு கலைமாமணி வாமணனின் எழுத்திலும் ஆராய்ச்சியிலும் அருமையாக புத்தகமாக மலர்திருக்கிறது.

Write a review

Please login or register to review

மன்னவன் வந்தானடி (கே.வி.மகாதேவன் )

  • Rs.200.00