• கொத்தமங்கலம் சுப்பு  (திரையிசை பாடல்கள்)

வஞ்சி கோட்டை வாலிபன்,இரும்புத்திரை ,சந்திர லேகா போன்ற படங்களில் வரும் பாடல்கள் கலாசிகாமணி பத்மஸ்ரீ கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதப்பட்டது.அக்காலகட்டதில் இவரது பாடல்கள் இவர் தான் எழுதினார் என்று பலர் அறிந்திருக்கவில்லை.அவர் எழுதிய இந்த பாடல்கள் எல்லாம் அக்காலத்தில் வேறொரு கவிஞரின் பெயரில் வெளிவரும்,இதனால் மனம் நொந்து போன கொத்தமங்கலம் சுப்பு குடும்பத்தினர் அவர் எழுதியுள்ள திரைப்படப் பாடல்களைத் தொகுத்து புத்தக வடிவில் வெளியிடுவது என்று தீர்மானம் எடுத்தனர் . அதேபோல் கொத்தமங்கலம் சுப்பு எழுததாத பாடல்கள்  அவர் பெயரில் இடம்பெறுவதையும் அவர்கள்  விரும்புவதில்லை.அழகான தமிழ் வார்த்தைகள் நிறைந்த இவரது பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்,இத்தொகுப்பில் காதல்,நாட்டு நடப்பு ,குடும்பம்,அறிவுரை ,தெய்வீகம்,தாலாட்டு,நகைச்சுவை,ஆசை  என்று சில உட்பிரிவுகளுடன் பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளது சிறப்பு.

Write a review

Please login or register to review

கொத்தமங்கலம் சுப்பு (திரையிசை பாடல்கள்)

  • Rs.100.00