• பி.ஆர்.எஸ்.கோபாலின் “குண்டூசி”

தமிழ்த் திரை இதழ் ஆசிரியரின் சரித்திரத்தையும் அவருடைய எழுத்து வன்மையையும் ,”குண்டூசி பி.ஆர்.எஸ்.கோபால் சரித்திரமும் ஏடுகளும்’என்ற இந்த நூலில் வாமணன் இனம் காட்டுகிறார்.மொழிப்பற்றும் நேர்மையும் எழுத்தாற்றலும் கொண்ட காலஞ்சென்ற கோபாலின் எழுத்துக்கள் ஒரு தகவல் பொக்கிஷம் .அவர் வழங்கிய நட்சத்திரங்களின் ‘வாழ்க்கை வர்ணனைகள் ‘,திரை முன்னோடிகளை நம் கண்முன் நிறுத்துகின்றன.தமிழ் இதழ்களின் சரித்திரத்தில் முதன் முதலாக கேள்வி-பதில் பகுதியைப் புகுத்தியவர் ‘குண்டூசி கோபால்’ என்று பல பேருக்கு தெரியாது.குண்டூசி பத்திரிக்கையின் திரை விமர்சனங்கள் நடுவுநிலையோடு  பல  படங்கள் சீர் தூக்கிப் பார்த்திருக்கின்றன.இவை யாவும் இந்த நூலில் வாமணனின் தேர்வுகளாக மணக்கின்றன .தமிழ் வாசகர்களுக்கு,குறிப்பாகத் திரைத் துறையின் கடந்த காலங்களை பற்றி அறிய விரும்பும் வாசகர்களுக்கு இந்த நூல் ஒரு புதையலாக அமையும்.

Write a review

Please login or register to review

பி.ஆர்.எஸ்.கோபாலின் “குண்டூசி”

  • Rs.200.00