• படச்சுருள் வருட சந்தா

படச்சுருள் மாத இதழ் என்பது மற்ற மாத இதழ்களை போல சராசரி இதழ் மட்டுமல்ல. அது ஒரு மக்கள் இயக்கத்தின் முன்னெடுப்பு. ஒரு இயக்கம் என்றால், அந்த இயக்கத்தின் கொள்கைகளை கோட்பாடுகளை, சித்தாந்தங்களை மக்களுக்கு எடுத்து செல்ல பல்வேறு ஊடகங்களின் உதவி தேவை. ஆனால் இன்றைய சூழலில் மாப்பியாக்களின் கையில்தான் பெரும்பாலான ஊடகங்கள் இருக்கிறது. அல்லது ஊடகங்களில் முக்கிய பொறுப்பில் இருப்பவரின் கருத்துக்கு ஒத்த கருத்தை நாம் கொண்டிருந்தால்தான் நம்முடைய கருத்தை, சித்தாந்தங்களை அந்த ஊடகங்களும் ஏற்றுக்கொள்ளும். தங்களுடைய ஊடகங்களில் அத்தகைய கருத்துகளை வெளியிடும். ஆனால் நிகழ்காலத்தில் எந்த ஊடகத்துடனும் நாம் ஒத்துப்போக வாய்ப்பே இல்லை. அறம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய நிலையில்தான் எல்லா ஊடகங்களும் இருக்கின்றன. இருக்கின்ற கொள்ளைக்காரர்களின் யார் கொஞ்சம் அறத்தை மதிப்பவர் என்று வேண்டுமானால் தேடிப்பிடிக்கலாம். ஆனால் கொள்ளைக்காரர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இத்தகைய சூழலில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் முதல், ஒவ்வொரு குடிமகனின் நாடிநரம்பு வரை புரையோடி போயிருக்கும் சினிமாவின் பாதையை செப்பநிடாமல், சினிமா போதிக்கும் போலியான வாழ்க்கையை கட்டுடைக்காமல் நாம் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது. சினிமாவை வேரோடு வெறுப்பவர் கூட அவரது தந்தை அல்லது தாத்தா வழியே தமிழ் சினிமா போதித்திருக்கும் பழிவாங்குதல், சுயக் கழிவிரக்கம் போன்ற நுண்ணுணர்வை பாதிக்கும் உணர்வுகளை தூக்கிப்பிடித்துக்கொண்டுதான் இருப்பார்.


எனவே ஒட்டுமொத்த சமூகத்தின் உளவியலையும் மாற்ற வேண்டுமானால் அது பெரிய அளவில் மக்களை சென்றடையும் சினிமா என்கிற ஊடகக் கலையால் சாத்தியப்படும். எனவே அத்தகைய சினிமாவின் அறம் என்பதில் கொஞ்சம் கூட மாசு இருக்கக் கூடாது என்பதே உண்மை. மக்களின் ரசனை மாற்றம், அரசியல் மாற்றம், உளவியல் மாற்றம் என சமூகத்தின் அத்தனை தேவைகளையும் மாற்ற நிறைய கள பணிகளை மேற்கொண்டாக வேண்டும். அதனை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். எனில் நமக்கு சொந்தமாக ஒரு ஊடகம் தேவை. முதலில் அந்த ஊடகம் அச்சு வடிவில் சாத்தியப்பட்டிருக்கிறது. எனவே நாம் அதனை கொண்டாட வேண்டும். அதற்கு சந்தாக் கட்ட வேண்டும். அதன் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பங்கெடுக்க வேண்டும். அல்லாமல் அரசியல் ரீதியான மாற்றத்தை நாம் நிகழ்த்திக் காட்ட வாய்ப்பே இல்லை. எனவே நண்பர்களே உங்கள் பங்காக படச்சுருள் மாத இதழுக்கு உடனே சந்தாக் காட்டுங்கள். கொஞ்சம் வசதியுள்ளவர் என்றால் ஆயுள் சந்தா, அல்லது புரவலர் சந்தாவைக் கட்டுங்கள்.

வருட சந்தா - 250

Write a review

Please login or register to review

படச்சுருள் வருட சந்தா

  • Rs.250.00